ஆஸ்திரேலிய ஓபன்: ரோஜர் ஃபெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலியாவின் அஷ்லி பர்டி, கீரீஸின் ஸ்டீபனோஸ் சிட்சிபஸ், செக் குடியரசின் தோமஸ் பெர்டிச் ஆகியோர் 4-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

புகழ்பெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில் முதல், மற்றும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், மூன்றாம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 3-ம் நிலை வீரரும், ஸ்விட்ஸர்லாந்தை சேர்ந்தவருமான ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை 6 க்கு 2, 7 க்கு 5, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து 4 ஆம் சுற்றுக்கு முன்னேறினார்.

Exit mobile version