தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 6-ம் தேதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இது மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் இலங்கை மற்றும் குமரிக்கடல் திசையில் 6 முதல் 8-ம் தேதி வரை கடக்கக்கூடும் என கூறினார்.
இதனால் இந்த இருநாட்களும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என தெரிவித்தார்.
மேலும் மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கூறினார். கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் திரும்புமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.