ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பாலின் கொள்முதல் விலையை கூட்ட வேண்டிய கட்டாயம் தற்போது தான் ஏற்பட்டுள்ளது என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் 567 பயானாளிகளுக்கு 2 கோடியே 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். மேலும், பால் விலை உயர்வால், எந்த கொந்தளிப்பும் இல்லை என்றும், பால் விலை உயர்வு பற்றி குறை சொல்பவர்கள் சொல்லி கொண்டே இருப்பார்கள் என்றும் சாடினார். தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் வெளியே இருந்து இந்தியாவுக்கு எதிராக செய்யும் சதி வேலையை, எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் பேச்சுரிமை எனக்கூறி இந்தியாவின் இறையாண்மையை கெடுக்கும் வகையில் பிரிவினையை மக்களிடம் எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன எனவும் குற்றம்சாட்டினார்.