அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, அயோத்தி விவகாரம் என்பது, மதவாதம் மதம் சம்பந்தப்பட்டது கிடையாது என்றும் கடவுள் ராமர் என்பவர் நமது வரலாறு, கலாசாரம், பாரம்பரியத்தின் அடையாளம் எனவும் கூறினார்.
ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்படவில்லையெனில், வேறு எங்கு அக்கோயிலை கட்டுவது என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு, இஸ்லாமிய மக்கள் ஆதரவாக உள்ளதாக கூறிய நிதின் கட்கரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுதொடர்பாக நீதிபதிகளுக்குதான் முடிவெடுக்க உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.