அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் மலை சார்ந்த பகுதிகளில் மட்டும் அடுத்த இரண்டு இரவுகள் உறை பனி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரங்களில் லேசான பனி மூட்டம் நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்சம் வெப்பநிலையாக 20 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version