தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால், தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி காணப்பட்டது. நேற்றிரவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புல்லூர், திம்மாம்பேட்டை, நாராயணபுரம் லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடியவிடிய பெய்த கனமழையால், புல்லூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திம்மாம்பேட்டை, அலாசந்திராபுரம், அம்பலூர் வழியாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதே போல் நாராயணபுரம் பகுதியில் இருந்து கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மழை வெள்ளம் குறித்து செய்தியாளர் தரும் தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕
Discussion about this post