ஊள்ளூர்லயே ஆடு பிடிக்க தெரியல… இதுல அசலூர்ல போய் ஆன பிடிக்கிற கதையாக, ஆட்சியில் இருக்கும் தமிழகத்திலேயே மக்களுக்கான எதையும் முழுமையாக செய்ய முடியாமல், இந்திய அளவில் அரசியல் பண்ணப் போவதாகச் சென்று முக்குடைபட்டு நிற்கிறது திமுக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்…
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு தேசிய அளவில் அமைத்துள்ள கூட்டணிக்காக அரும்பாடு பட்டுக் கொண்டிருப்பதாக பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். பாட்னா போகிறேன், பெங்களூர் செல்கிறேன், மும்பை சென்றுவிட்டேன் என்று ஸ்டாலினின் வீடியோ விளம்பரங்கள் பறந்து கொண்டிருக்க, இந்தியா கூட்டணிக்குள் குண்டு வைக்கும் வேலையை செய்திருக்கிறார் உதயநிதி…
நீட் எதிர்ப்பு உண்ணாவிரத நாடகத்தில் சோடை போனதையும், மக்களின் எதிர்ப்புகளையும் மடைமாற்ற, சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை கொளுத்திப் போட்டிருக்கிறார். உதயநிதி எதிர்பார்த்து போல அவருக்கு எதிரான விமர்சனங்கள் சலங்கை கட்டி ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரும், ஸ்டாலினும் எதிர்பார்க்காத நியூட்டன் மூன்றாம் விதி இப்போது அவர்களுக்கே ரிப்பீட் ஆகி இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்குள் இருந்தே உதயநிதியைக் கண்டித்திருக்கிறார்கள். மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ்தாக்கரே கட்சியின் எம்.பி. என இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் தலைவர்களும் உதயநிதிக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்க, ஸ்டாலினின் துக்கம் தொலைந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிரதமர் யார் என்னும் சர்ச்சையால் பிளவில் இருக்கும் இந்தியா கூட்டணியில், உதயநிதிக்கு எதிரான கண்டனங்களும், எதிர்ப்புகளும் இன்னும் பிளவை அதிகரித்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசுக்கு எதிரான கூட்டணிதான் இது… இந்துக்களுக்கு எதிரான கூட்டணி இல்லை என்பதையே அவர்களின் வாய்வார்த்தைகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கட்டிவைக்கப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கும் இந்தியா கூட்டணியில் உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்பு என்பது, அந்த கூட்டணி உடைய திமுகவே காரணமாக அமைந்து விடும் என்பதை கட்டியம் கூறுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Discussion about this post