புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியை தொடர்ந்து அதிமுக என்றால் இனி அது எடப்பாடி கே.பழனிசாமி தான் என்பதை, லட்சபோ லட்சம் தொண்டர்கள் திரண்ட மதுரை மாநாடு நிரூபித்தது ஒருபக்கம் என்றால், சட்டரீதியாக சென்னை உயர்நீதிமன்றமும் வழங்கியுள்ள தீர்ப்பு அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றியை வாங்கிக் குவித்திருக்கிறது….
தமிழகம் எங்கும் அதிமுகவினர் இனிப்புகளை வழங்கியும், அதிர்வேட்டுகளை முழங்கியும் வெற்றியை பறைசாற்றி வருகின்றனர்.
2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கடந்த மார்ச் மாதம் எடப்பாடி கே.பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் என அனைத்துக்கும் தடை விதிக்கக் கோரிய துரோகிகளின் மனுக்களை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பு வழங்கியது.
பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றே தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், பன்னீர் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானம் செல்லும் என்றும், நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். மேலும், துரோகிகள் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு என்பது 2 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவின் ஒற்றை நம்பிக்கையாக திகழும் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் என்பதை ஓங்கி ஒலித்திருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த தீர்ப்பு என்று கூறியிருக்கிறார். எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
((ப்ரீத்: GV00C1H0))
புரட்சித்தலைவின் கூற்றுப்படி எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், இன்று 2 கோடி தொண்டர்களுடன் அதிமுக என்னும் பேரியக்கம் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கிறது.
கட்சியை அழித்துவிட வெளியில் இருந்து திட்டமிட்டவர்களுக்கும், உள்ளடி வேலை பார்த்த துரோகிகளுக்கும் எடப்பாடி கே.பழனிசாமி நடத்திய சட்டப் போராட்டங்கள், நீதிமன்றத்தின் தீர்ப்பாகி சவுக்கடியாக அமைந்துள்ளது.
துரோகிகள், எதிரிகளை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓடவிட்டுள்ளதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றிமேல் வெற்றிகளை குவித்திருக்கிறார். துரோகத்தை தவிடுபொடியாக்கி சாதித்த இந்த நிகழ்வு, வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை கட்டியம் கூறும் வகையில் அமைந்திருக்கிறது.
Discussion about this post