தேனி மாவட்டம், இடுக்கியில் உள்ள முக்கிய அணைகளில் முன்னெச்சரிக்கை தகவல் வழங்கும் விதமாக அபாய ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை திகழ்ந்து வருகிறது. மழை காலத்தின் போது இங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பிவிடும் என்பதால் அடிக்கடி அணைகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படும். இது குறித்த தகவல் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக வழங்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால், தகவல் மக்களை சென்றடைய தாமதமாகிறது. இதனை தடுக்கும் விதமாக பேரிடர் கால குழுவினர், செறுதோனி அணையில் முதற்கட்டமாக முன்னெச்சரிக்கை தகவல் வழங்கும் அபாய ஒலி எழுப்பும் கருவியை பொருத்தி சோதனை நடத்தினர். மேலும், சோதனையின் போது பொதுமக்கள் அச்சம் அடையாதவாறு முன்கூட்டியே உள்ளூர் தொலைக்காட்சிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிப்புகள் வெளிடப்பட்டது குறிப்பிடதக்கது. சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததால் விரைவில் மாவட்டத்தின் முக்கிய அணைகளில் இக்கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.