இலங்கையில் ரணில் தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா புதிய அமைச்சர்களுக்கு நியமனங்களை வழங்கினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகாரங்களை கவனிப்பார்.
ஜோன் அமரதுங்க – சுற்றுலா துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகாரங்களையும், காமினி ஜயவிக்ரம பெரேரா – புத்த சாசனம் மற்றும் வட மேல் மாகாணங்களையும் கவனிப்பார்.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீரவும், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக தலதா அத்துகோரலவும், வெளிநாட்டு அலுவல் அமைச்சராக திலக் மாரப்பனவும், மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சராக ரவி கருணாநாயக்கவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.