புதிய வளர்ச்சிகளை நோக்கி இந்தியா முன்னேறி செல்கிறது – பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற வந்த மோடி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி, தனது 5வது சுதந்திர தின உரையாற்றினார்.  எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா வழங்கும் என்று மகாகவி பாரதியின் வரிகளை தமிழில் வாசித்து பிரதமர் மோடி உரையை தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அசுர வேகத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அனைவருக்குமான இந்தியாவை உருவாக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார். சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவதாகவும் அவர் தெரிவித்தார். பேரிடர் காலங்களில் கருணையுடனும், பகைவர்களிடம் ஆக்ரோஷத்துடனும் ராணுவ வீரர்கள் செயல்வடுவதாக பிரதமர் புகழாரம் சூட்டினார். நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். கிராமப்புறங்களுக்கு மின்வசதியும், சமையல் எரிவாயு இணைப்பும் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுவதும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள், ஐ.ஐ.டி.க்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சீர்திருத்தம், செயல், முன்னேற்றம் தான் பாஜக அரசின் தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Exit mobile version