பிரதமர் மோடியின் முடிவால் இந்திய அளவில் டிரெண்டாகும் No Sir ஹேஷ்டேக்..!

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததை அடுத்து “நோ சார்” என்ற ஹாஷ்டேக்கை பலரும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

பிரதமராக பதவியேற்றதில் இருந்து பிரதமர் மோடி, தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். பிரதமரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.  இந்த நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யோசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், ட்விட்டரில், 53.3 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில், 35.2 மில்லியன் பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும் பின் தொடர்கின்றனர். இந்த  நிலையில், பிரதமரின் இந்த பதிவுக்கு, சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டாம் என்பதை வலியுறுத்தும் விதமாக, “நோ சார்” என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.  “நோ சார்” ஹாஷ்டேக் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version