திண்டுக்கல்லில் நெதர்லாந்து மிளகாய் 2 மடங்கு கூடுதல் மகசூல் – விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல்லில் சாதாரண மிளகாயை விட நெதர்லாந்து மிளகாய் இரண்டு மடங்கு கூடுதல் மகசூல் அளிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி, இயற்கை சீற்றம் போன்றவற்றால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குறைவான தண்ணீரில் பசுமை குடில் அமைத்து சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை குடில் அமைத்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மழைநீர் தடுப்பான் பசுமை குடிலில் நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கபட்ட ஹாட் பெப்பர் மிளகாயை விவசாயிகள் நட்டு வளர்க்கின்றனர். இந்த குடிலில் சாகுபடி செய்யும் போது மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படாது. இந்த மிளகாய் 120 நாட்களில் மகசூல் கிடைக்கும் என்றும், ஒரு மிளகாய் அரை அடி நீளத்திற்கும் மேலாக 20 சென்டி மீட்டர் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நெதர்லாந்து மிளகாய் சாதாரண மிளகாயை விட இரண்டு மடங்கு கூடுதல் மகசூலை அளிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version