திமுக வேட்பாளரின் கல்லூரியில் நீட் தேர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

நீட் தேர்வுக்கு எதிராக திமுக பிரசாரம் செய்து வரும் நிலையில், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு எதிராக திமுக பிரசாரம் செய்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் மக்களவை தேர்தல் அறிக்கையில் அக்கட்சி கூறியுள்ளது. இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும், பொங்கலூர் பழனிசாமிக்கு சொந்தமான, பள்ள பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில், நீர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் நீட் தேர்வை எதிர்ப்பதும் மறுபக்கம் தங்களுக்கு சொந்தமான கல்லூரியிலேயே நீர் தேர்வை நடத்துவதும், என நீட் தேர்வை வைத்து திமுகவினர் போடும் இரட்டை வேடம் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Exit mobile version