காரைக்குடியில் உள்ள தொழில் அதிபரான இளங்கோ மணி என்பவரது வீட்டில் 200 சவரன் தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகர்நோம்பு பொட்டல் அருகில் வசிக்கும் இளங்கோ மணி குடும்பத்துடன் ஒரு வாரம் தைவன் நாட்டுக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகை மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.