புதுச்சேரியில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பம் சுப்பையா நகர் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜிம் பாண்டியன் மீது அரியாங்குப்பம் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில், வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பாண்டியன் அதே பகுதியில் உள்ள வாலிபால் மைதானத்தில் இருந்த போது அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வந்த மர்ம கும்பல், பாண்டியனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து மர்ம கும்பல் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.