புயலுக்கு பின் அமைதி என்பதுபோல அக்னிக்கு முன் மழை!

தமிழக பகுதிகளில் தற்பொழுது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பு பகுதி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 60 இடங்களில் கன மழை பெய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை பொறுத்தவரையில் நீலகிரி முதல் தேனி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பொறுத்த வரையிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே மாதம் ஆறாம் தேதி ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி உருவாகி அதனை தொடர்ந்து வருகின்ற 7 அல்லது 8 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய்ய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

Exit mobile version