மியான்மர் நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், மியான்மார் நாட்டின் மவுலாமைன் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலும் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோயில்கள், மருத்துவ உதவி மையங்கள் போன்ற இடங்களுக்கு மீட்பு குழுவினர் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Exit mobile version