எனது மருத்துவமனை – எனது பெருமை திட்டத்தில் உள்ள மருத்துவமனை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

எனது மருத்துவமனை – எனது பெருமை என்ற திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 26 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு மருத்துவமனை கட்டடங்களை தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

110 விதியின் கீழ், அரசு மருத்துவமனைகளின் சேவையை மேம்படுத்தும் வகையில், ஆர்வமுள்ள தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன், ‘எனது மருத்துவமனை, எனது பெருமை’ என்ற திட்டம் செயலப்டுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற சட்டபேரவை கூட்டுத்தொடரில் அறிவித்திருந்தார். அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டடத்தை திறந்து வைத்தார். இதேபோல், கன்னியாகுமரி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், சுமார் 26 கோடியே 54 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அசோக் லேலண்டு நிறுவன தலைவர் பால்சந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version