இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் வறுமை குறித்து, ஐ.நா. சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு, அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த, 10 ஆண்டுகளில், சர்வதேச அளவில் நிலவிய வறுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 101 நாடுகளில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், மக்களின் வருமானம் மட்டுமல்லாமல், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் சேர்க்கப்பட்டன. இதன்படி, 10 ஆண்டுகளில், இந்தியா, பெரு உள்ளிட்ட, 10 நாடுகளுடைய அரசுகளின் முயற்சியால், பெருமளவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில், இந்தியாவில், 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.