கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியரை வெட்டி கொலை செய்த வழக்கில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்…
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு பகுதியில் ஈரோடு – சத்தியமங்கலம் சாலையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் கடனை வசூல் செய்யும் ஊழியராக சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் பணிபுரிந்து வந்தார்
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அன்று இரவு 7.40மணிக்கு சண்முகம் நிதி நிறுவனத்திற்கு வரவேண்டிய பணம் குறித்த விவரங்களை சேகரித்து கொண்டிருந்தார் சண்முகம், அப்போது திடிரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தில் புகுந்து கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கி சண்முகத்தை வெட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சண்முகம் அலறியடித்து அலுவலகத்தை விட்டு வெளியே ஓட்டிவந்துள்ளார். பின்னர் நான்கு பேர் கொண்ட கும்பல் சண்முகத்தை துரத்தி அலுவலகத்தின் மாடிப்படிகளில் வழி மறித்து மீண்டும் சரமாரியாக தலை, கழுத்து, முதுகு, கை, என பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர்
இதில் சண்முகம் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஈரோடு சென்னிமலை சாலையில் நின்று கொண்டிருந்த குற்றவாளிகள் கார்த்தி, சபரிசித்தார்த், வேலவன் மற்றும் ராஜசேகர் என்ற நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட சண்முகம், கொலை செய்த கார்த்தி மனைவிக்கு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துவந்ததால் கொலை நடந்ததாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்த நான்கு பேரையம் கைது செய்த காவல்துறையின் நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.