முதுகுளத்தூர் சந்தையில் அதிகளவில் கூடும் பொதுமக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சந்தையில் விற்கப்படும் வெளிமாவட்ட அரிவாள்மனை, கத்தி உள்ளிட்டவற்றை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

முதுகுளத்தூரில் மாதத்திற்கு நான்கு முறை சந்தை கூடுகிறது. இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் விற்கப்படுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் அரிவாள்மனை, கத்தி, தேங்காய் திருகி போன்றவை முதுகுளத்தூர் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தூத்துக்குடியை சேர்ந்த கணேசன் என்பவர், இவற்றை தயாரித்து விற்பனை செய்கிறார்.

Exit mobile version