இந்தியாவில் அதிகளவில் ஓலைச்சுவடிகள் இருப்பது தமிழகத்தில் தான் – அமைச்சர் பாண்டியராஜன்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தினை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் அதிகளவில் ஓலைச்சுவடிகள் இருப்பது தமிழகத்தில் தான் என்றும், அண்ணா நூலகத்தில் இருப்பது போல, தமிழ் பல்கலைக்கழகத்திலும் புதிய தொழில்நுட்பத்தில் சுவடிகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதில் சித்த மருத்துவம் சார்ந்த சுவடிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன், இந்தாண்டு தொல்லியல் துறைக்காக மத்திய அரசு 12 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

மதம் என்கிற அடிப்படையில் பார்க்கும் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பெண்கள் மதித்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லாமல் இருப்பது சிறப்பு என்றாலும், நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version