கோவையில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே 10-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு தரம் சரியில்லை என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அங்கு உள்ள டீக்கடையில் உள்ள டீ யின் தரம் மற்றும் பால் தரம் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல அந்த கடைகளில் உள்ள ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்களின் தரமும் சோதிக்கப்பட்டது. மேலும் பழைய உணவுப் பொருட்களை விற்கக் கூடாது எனவும் எக்காரணத்தைக் கொண்டும் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை விற்கக் கூடாது எனவும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

Exit mobile version