தேனி பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தன்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக முரண்பாடுகள் நிறைந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வைத்துள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அனைத்து தமிழர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி தனது உரையை தொடங்கிய மோடி, மக்களின் வரவேற்புக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் இந்திய தேசமே பெருமை கொள்வதாக புகழாரம் சூட்டினார்.2ஜி ஊழல் வழக்கில் திமுகவினர் சிறையில் இருந்தனர் என்றும் காங்கிரஸ் மற்றும் திமுக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர் என்றும் மோடி தெரிவித்தார். ஆனால், தற்போது தன்னை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக முரண்பாடு நிறைந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன என்று விமர்சித்தார்.

மதுரை- போடி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் திட்டம் வேகமாக நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், சென்னையில் இருந்து மதுரைக்கு தேஜாஸ் ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மதுரை- செட்டிக்குளம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை விரைவாக பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

Exit mobile version