ஞாயிற்றுக் கிழமை இலங்கை செல்லவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மோடியின் இலங்கை பயணத்தை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே உறுதிப்படுத்தியுள்ளார். தனது பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து, பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமரின் இலங்கை பயணத்தை முன்னிட்டு கொழும்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.