சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப்பதிவு

நாகை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது கடைசி மகள் 15 வயதுடைய சிறுமி புதுச்சேரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மே மாதம் விடுமுறைக்காக வேளாங்கண்ணிக்கு வந்தார். அங்கே சிறுமியின் தந்தைக்கு பழக்கமான தாஸ் என்பவன், ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த தாஸின் நண்பர்களான சூர்யா , ரூபன் காரல் மார்க்ஸ்,வீரையன், கோகுல், பொன்னையன், முத்து, முருகன் உள்ளிட்ட 8 பேரும் அமுதாவை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். விடுமுறை முடிந்து புதுச்சேரிக்கு படிக்க செ‍ன்ற அமுதா சில வாரங்களுக்கு முன் விடுதியில் மயங்கி விழுந்துள்ளார். விடுதி காவலர்கள் மருத்துமனை அழைத்துச் சென்ற போது அமுதா கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் தெரிந்ததும் விடுதியிலிருந்து அமுதாவை வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது அமுதாவை தாஸ், சூரியா உள்ளிட்ட 8 பேரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் அமுதாவை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாஸ், சூர்யா, ரூபன், காரல்மார்க்ஸ், வீரையா, கோகுல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய பொன்னையன், முத்து , முருகன் ஆகிய மூவரைரையும் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version