மக்களின் தேவைக்கேற்ப குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அமைச்சர்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை வரும் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மக்களின் தேவைக்கேற்ப குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version