அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தனது சொந்த தொகுதியான விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பது, திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவது, ஆய்வு மேற்கொள்வது என பல்வேறு பணிகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்தநிலையில் இன்று விராலிமலை தொகுதிக்கு சென்ற அமைச்சர், இருசக்கர வாகனத்திலேயே சென்று அங்குள்ள மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். இருசக்கர வாகனத்தில் ஆய்வுப் பணிக்கு சென்ற அமைச்சரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Exit mobile version