அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆவத்திபாளையம், களியனூர், சுபாஷ் நகர், அம்மன் நகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த வாகனங்களில் நின்றபடியும், வீடு வீடாகச் சென்றும் பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.

அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Exit mobile version