தமிழகத்தில் இரு மொழிக்கல்விதான் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அளித்த அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அமைச்சரவை கூட்டத்தில் இரு மொழிக்கல்வி தொடரும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். நாளை மறுதினம், 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளதாகவும் கூறினார்.
இது வரை இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பாட திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன் 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளின் பாட திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.