தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிவாரணத் தொகுப்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். கொரோனா பாதிப்பு காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் 14 நாட்கள் வெளியே வர மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அஇஅதிமுக சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, கோவை புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு நிவாரணத் தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version