அமமுக பேனர் அகற்றும்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

விருதுநகரில் அமமுக பேனர் அகற்றும் பணியின்போது பலியான தொழிலாளியின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த அமமுக கட்சி நிகழ்ச்சியின் போது பல இடங்களில் அக்கட்சியின் விளம்பரபலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பர பலகைகளை மாடசாமி என்பவர் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது அந்த வாகனம் விபத்துகுள்ளாகியதில் மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது தொடர்பாக இறந்தவரின் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யாமல் அமமுக அலட்சியம் காட்டிய நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இறந்த தொழிலாளியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

Exit mobile version