அதிமுக 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீனவ மக்களிடம் பிரசாரம் செய்தார். தருவை குளம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தொண்டர்களுடன் ஒரு படகில் ஏறி கடலுக்குள் சென்றார். அப்போது அவர் சிறிது நேரம் படகை ஒட்டிச்சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பின்னர் கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து மீனவர்கள் இரட்டை விரலை காட்டி தங்களது ஆதரவை உற்சாகமாக வெளிப்படுத்தினர். பின்னர் நியூஸ் ஜெ செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அனைத்து சமூக மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இயக்கமாக அதிமுக இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version