ரஜினி மனசாட்சி உள்ள மனிதர் என்றும் நல்லதை பாராட்டக் கூடியவர் என்பதால் தான் நதிகள் இணைப்பை பாராட்டியுள்ளார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ராஜவர்மனை ஆதரித்து வாக்கு சேகரித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் எழுதிக் கொடுத்ததை நடித்தவர் ஆகையால் கமல் குறை சொல்லியே பழக்கப்பட்டவர் என்று விமர்சித்தார்.