மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி, மேல்மலையனூர் ஒன்றியத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சாத்தாம்பாடி, கன்னலம் ஆகிய இடங்களில் 6 ஆயிரத்து 142 ஏழை எளிய மக்களுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வேட்டி, சேலை, தையல் இயந்திரம்,எரிவாயு அடுப்பு, மாற்றுதிறனாளிகளுக்கு மிதிவண்டி, கிரிக்கெட் உபகரணங்கள், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ஏழுமலை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Exit mobile version