குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை மக்களுக்கு, தண்ணீர் தரமுடியாது என கூறும் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, மாவட்டத்தில் செய்யப்படும் குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.
சென்னை மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், துரைமுருகன் பேச்சுக்கு ஸ்டாலினின் பதில் என்ன என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து வந்தால் பெரிய போராட்டமே வெடிக்கும் என சர்ச்சைக்குறிய கருத்து கூறிய திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.