கூடுதலாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்: அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் சார்பில் முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்ப்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டிவனத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், இலவச வீட்டுமனை ஒப்படைப்பு, சிறுகுறு விவசாய சான்று, புதிய குடும்ப அட்டை, வேளாண்மைத் துறை மூலம் நலத்திட்டங்கள், தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட 2 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழாவில் பேசிய அவர், கூடுதலாக 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வழங்க உள்ளது என்று கூறினார்.

Exit mobile version