மாமல்லபுரத்திற்கு வந்த சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி தமிழ்ப் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் வேட்டி, சட்டை அணிந்திருந்தது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் எனவும், கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ்ப் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது இல்லை எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழர் பாரம்பரிய உடை அணிந்த மாண்புமிகு பிரதமர் மோடிக்கு என் பாராட்டுக்கள். கடந்த காலங்களில் எந்தவொரு பிரதமரும் தமிழ் பண்பாட்டை இந்தளவுக்கு அங்கீகரித்தது கிடையாது!@narendramodi pic.twitter.com/pMKUYXFKGH
— SP Velumani (@SPVelumanicbe) October 12, 2019