இந்தியக் காவல் பயிற்சி மையத்தை பார்வையிட்ட அமைச்சர் அமித் ஷா

ஐதராபாத் காவல் அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இந்தியக் காவல்பணி அதிகாரிகள் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் இந்தியக் காவல் பணி அதிகாரிகள் 92 பேரும், வெளிநாடுகளைச் சேர்ந்த 11பேரும் இந்த ஆண்டு பயிற்சியை முடித்துள்ளனர்.

பயிற்சி முடித்துப் பணிக்குச் செல்லும் இவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விழாவில் பங்கேற்றுப் பயிற்சி முடித்த காவல் அதிகாரிகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

Exit mobile version