மேற்கு வங்க மாநிலம் பரத்வானில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ல் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 2 பேர் பலியாயினர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவு, தடை செய்யப்பட்ட வங்கதேச அமைப்பான ஜமாத் உல் முகாஜிகிதீன் என்ற பங்களாதேஷ் அமைப்புக்கும், இதில் தொடர்பு இருப்பதை உறுதி செய்தது.
இந்நிலையில், கொல்கத்தாவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை கைது செய்து, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்கள் தென்னிந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.