1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார் எம்.ஜி.ஆர்… தற்போதைய பிரபலங்கள் சிலர் அரசியலில் குதிக்க போகிறேன் என கூறி தேர்தலை சந்திக்க தயங்கி கொண்டிருக்கிறார்கள்…
ஆனால் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி மக்களிடம் தனக்கு உள்ள அங்கீகாரத்தை நிரூபித்தார் எம்.ஜி.ஆர்…
அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும் துரோக திமுகவை மக்கள் புறக்கணித்து எம்.ஜி.ஆருக்கு வெற்றிமேல் வெற்றியை கொடுத்தனர். இதனால் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டபேரவை பொதுத்தேர்தலில் 144 தொகுதிகளுடன் தனிமைப்பெரும் கட்சியாக உருவெடுத்தது அதிமுக…
எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார்… இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் மத்திய அரசின் உதவியுடன் 1980ஆம் ஆண்டு அதிமுக அரசை கொல்லைபுறமாக வந்து கலைத்தனர்.
ஆனால் அதே ஆண்டில் நடைபெற்ற சட்டபேரவைக்கான பொதுத்தேர்தலில் மீண்டும் எம்.ஜி.ஆரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தனர் தமிழக மக்கள்…
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு இக்கட்டான சூழலில் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா, தனது ஆளுமை திறனால் ஆணாதிக்கமிக்க அரசியலில் மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்கான அதிமுகவை வளர்த்து எடுத்து பாதுகாத்தார்.
அது தற்போது 47வது ஆண்டில் அடி எடுத்து வைத்து மக்களுக்காகவே பயணித்துக்கொண்டிருக்கிறது…