கண்காட்சியின் போது ‘தொப்பென்று’ இராட்டினம் கீழே விழுந்து விபத்து!

merry go round accident punjab

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கேளிக்கை கண்காட்சியில் உயரத்தில் சுற்றிய இராட்டினம் எதிர்பாராத விதமாக பழுதடைந்து தொப்பென்று கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தஷெரா மைதானத்தில் நடந்த கண்காட்சியில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version