மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார். சமூக நீதிக்கு எதிராக சதித் திட்டங்கள் நடைபெறுவதாக எச்சரித்துள்ள வைகோ, இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இட ஒதுக்கீடு விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Exit mobile version