முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து எழுதவும் பேசவும் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொடநாடு ஆவணப்படம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது முற்றிலும் பொய்யான அவதூறுகளை நாரதா இணையதளத்தின் ஆசிரியர் மேத்யூ கூறி வருகிறார் . இந்நிலையில், தனது பெயர் மற்றும் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேத்யூ சாமுவேல் பல்வேறு அவதூறுகளை பரப்பிவருவதாக கூறி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த உயர் நீதிமன்றம், முதலமைச்சர் குறித்து ஆதாரமின்றி ஊடகங்களில் பேசவும், ஆவணங்களை வெளியிடவும் கூடாது என மேத்யூ சாமுவேல், சயன், மனோஜ் உள்ளிட்ட 7 பேருக்கு உத்தரவிட்டது. முதலமைச்சர் மனுவுக்கு 30ம் தேதிக்குள் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Discussion about this post