தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவை மையமாக கொண்டு மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலத்துக்கடியில் 119 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு பெருவில் இருந்து 132 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் பிரேசில்,கொலம்பியா, ஈகுவடார் நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சேதங்களும் மிகக் கடுமையாக இருக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி பகல் 1 மணி 11 நிமிடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இதனிடையே இந்தியாவில் மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் 3 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை 7.49 க்கு 4.5 என்ற அளவிலும் நேற்று 4.8 மற்றும் 5 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.