உலக அமைதியை வலியுறுத்தி தேனியில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தார். கென்யாவைச் சேர்ந்த இரண்டு பேர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.