மகாராஷ்டிர முதலமைச்சராக அண்மையில் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ்-க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்_ காங்கிரஸ் கூட்டணி தாக்கல் செய்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் வாக்கு சீட்டு முறையில் மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏதுவாக இடைக்கால சபாநாயகரை இன்று மாலைக்குள் நியமிக்க வேண்டும்.நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அஜித் பவாரின் திடீர் ராஜினாமா மகாராஷ்டிரா அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது மேலும் இன்று 3.30 மணி அளவில் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் .