தேனியில் விவசாயிகள் பயிற்சி மையம் – துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

தேனியில் விவசாயிகள் பயிற்சி மையம், அம்மா கிளினிக்குகள், அங்கன்வாடி கட்டடங்கள் உள்ளிட்டவைகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், எண்டப்புளி ஊராட்சியில் 46 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விவசாயிகள் பயிற்சி மையத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இப்பயிற்சி மையத்தில் பயிற்சி அறை, பயிற்சி சாதனங்கள், சேமிப்பு கிட்டங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னர், தேவதானப்பட்டி பேரூராட்சியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர், பல்வேறு கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, காமய கவுண்டன்பட்டி மற்றும் வடுகப்பட்டி பேரூராட்சிகளில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்கள், கோகிலாபுரம், சீப்பாலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தேக்கம்பட்டி, இரங்கசமுத்திரம், வைகை புதூர், கோட்டார்பட்டி ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளையும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

Exit mobile version