மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான நீட் தேர்வுக் கட்டணத்தைக் குறைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கட்டணம் மூவாயிரத்து 750 ரூபாய் எனவும், இது எய்ம்ஸ் நுழைவுத்தேர்வுக் கட்டணத்தை விட அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணதைக் குறைக்கத் தேசியத் தேர்வாணையத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வுக் கட்டணத்தைக் குறைக்க இயலாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.